வினோதமாக இருந்த பப்பாளி பழத்தினை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி பகுதியில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஜவுளி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய வீட்டின் பின்பகுதியில் பப்பாளி மரம், பூஞ்செடிகள் போன்றவை வைத்து பராமரித்து வருகின்றார்.
இந்நிலையில் கிருஷ்ணராஜ் வளர்த்து வந்த பப்பாளி மரத்தில் வினோதமான பழம் இருந்தது. அதாவது அந்த பழத்தின் ஒரு பகுதியில் மானின் 2 கொம்புகள் போன்றும், நடுப்பகுதியில் அதன் முகம் போன்றும் இருந்தது. இந்த பப்பாளி பழத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.