Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டில் யாரும் இல்லாத நேரம்” தொழிலாளியின் துணிச்சலான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயி பூபதி வசித்து வருகிறார். இவர் தன் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த தோட்டத்தில் புதிதாக குடோன் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னிமலையில் உள்ள பொறையன்காட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 2 மாதங்களாக பூபதியின் தோட்டத்தில் தங்கி மண்வெட்டி வேலையில் ஈடுபட்டார். இந்தநிலையில் செல்வகுமார் அதே ஊரைச் சேர்ந்த ஒரு நபரிடம் 1/2 பவுன் மோதிரத்தை கொடுத்து பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நபர் இதுகுறித்து பூபதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பூபதி தன்னுடைய வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது அதில் இருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் என மொத்தம் 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக பூபதி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூபதியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வக்குமார் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்றதும், அதில் 5 பவுன் தங்க செயினை அவர் தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செல்வகுமாரிடம் இருந்த 9 பவுன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்தனர்.

Categories

Tech |