Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி…. வாலிபரின் துணிச்சலான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் அருகில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்நிலையில் சிறுமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முனிரத்தினம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின் சிறுமியை காவல்துறையினர் மீட்டு தர்மபுரியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |