வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வேன் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் பச்சியப்பன் தனது வீட்டிற்கு முன்பு வேனை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார்.
இதனையடுத்து மறுநாள் காலையில் பச்சியப்பன் வெளியே வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.