மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தர்மபுரி டேக்கீஸ்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து ஷேக் அப்துல்லா மீண்டும் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஷேக் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.