அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முகந்தனூர் காலனி தெருவில் கூலி தொழிலாளி விஜய் வசித்து வந்தார். இவர் தனது நண்பர் தீபக் என்பவருடன் கங்களாஞ்சேரியில் இருந்து வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொம்மாநத்தம் என்ற இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதில் தீபக் காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.