பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியலிடம் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் அர்சனெல் கிளப் அணிக்காக விளையாடும் பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பருடன் காரில் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கேப்ரியலை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் இருந்த பணம், செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்துள்ளனர். அப்போது தற்காப்புக்கு தாக்குதலில் ஈடுபட்ட கேப்ரியலை, பேஸ்பால் விளையாட்டு மட்டையால் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தொப்பியை காவல்துறையியினர் கைப்பற்றினர். அதன்பின் டி.என்.ஏ. மூலமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு கால்பந்து வீரர் கேப்ரியலிடம் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சி.சி.டி.வி. வீடியோ வெளியாகியுள்ளது.