சகல ஐஸ்வர்யங்களும் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டை நோக்கியபடி தண்ணீர் தெளித்தல் வேண்டும் .
- அதிகாலையில் கோலம் இடும் பொழுது மஹாலக்ஷ்மி வரவேண்டுமென்று ஸ்லோகங்களில் சொல்லிக்கொண்டு கோலம் இடுதல் வேண்டும்.
- லட்சுமி வாசம் செய்ய ஏகாதசி, கார்த்திகை,செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
- வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.
- செல்வ செழிப்பு உண்டாக செந்தாமரை மலரை வைத்து பூஜித்தல் நல்லது.
வீட்டில் மங்களம் உண்டாக பெண்கள் செய்யவேண்டியவை.
- பெண்கள் பின் தூங்கி முன் எழுதல் வேண்டும்.
- அதிகாலையில் எண்ணெய் குளியல் கூடாது.
- நீரில் இருந்து ஜபம், வழிபாடு செய்தல் கூடாது.
- முன்னோர்களின் நினைவுநாளில் வெந்நீரில் குளிக்கக்கூடாது.
- லட்சுமி வீட்டிற்குள் வர சூரிய உதயத்திற்கு முன் எழ வேண்டும்.
- இரவில் பால், தயிர்,சுண்ணாம்பு இவைகளை வாங்கவும் கூடாது,கொடுக்கவும் கூடாது.
- திருமணம் ஆன பெண்கள் கணவன் எழுந்திருக்கும் முன்பாக எழுந்து நீராடி விடுதல் வேண்டும்.
- மோதிர விரலால் குங்குமம் இடுதல் வேண்டும்.
- உண்பதில்,உறங்குவதில்,பேசுவதில்,எழுதுவதில்,உறவு கொள்வதில் நிதானத்தை அதிகம் கடைபிடித்தல் அவசியம்.
- சங்கு வளையல் முதலாவதாகவும், முத்து வளையல் இரண்டாவதாகவும், தங்க வளையல் மூன்றாவதாகவும், கண்ணாடி வளையல் நான்காவதாக அணிய வேண்டும். இவைகள் தெய்வ சக்தி தருவதாகும்.