நகை மற்றும் பணத்தை திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணிக்கவாசகர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குல தெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாரியம்மன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 தங்க மோதிரங்கள் மற்றும் 3,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது மாரியம்மனுக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து மாரியம்மாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியம்மாளின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.