வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது தாய் லோகநாயகியுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி படுகாயமடைந்துள்ளார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு லட்சுமிக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.