Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வீட்டிற்குள் 3 அடி நீளமுடைய சாரை பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகாமையில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் 3 அடிச் சாரை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் இருந்த 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதைப்போல் கேத்தாண்டப்பட்டி பரசுராமன் வட்டத்தில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர்.

Categories

Tech |