வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுடைய நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூசாரியூர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல் வீட்டில் திடீரென 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறி அடித்து வெளியே ஓடி வந்து விட்டனர்.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.