வீட்டின் உள்ளே புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் ரயில் நிலையம் அருகாமையில் இருக்கும் செம்மடை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் வீட்டிற்குள் 5 அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டுள்ளனர். மேலும் வீட்டிற்குள் நாகப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.