உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்தால் தாஜ்மஹாலுக்கு ரூபாய்.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அதாவது, நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தாததால் 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் வரியை 15 தினங்களுக்குள் செலுத்துமாறும் இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.