1. நான் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது.
2. இந்த உலகம் பெரிய பயிற்சி கூடம் நாம் வலிமை கொள்வதற்காக நாம் இங்கு வந்திருக்கிறோம்.
3. மனமே எல்லாம் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
4. ஒருவருடைய வாழ்க்கையாவது மாற்றாவிட்டால், நீ உனது வாழ்க்கையை தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம்.
5. உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை.
6. நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது.
7. அனுபவம் தான் அறிவு பெறுவதற்கு ஒரே வழி.
8. நாம் துன்பப்படுவதற்கு நம் செயல்கள் தான் காரணம் அதற்கு கடவுள் பொறுப்பில்லை.
9. கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னைத் தேடி வரும்.
10. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் அதனுடன் அனைத்திற்கும் மேலாக அன்பு இருத்தல் வேண்டும்.