Categories
உலக செய்திகள்

விவரங்களை வெளியிட தடையில்லை…. கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அங்கிருக்கும் பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரின் பெயர் விவரங்களை வெளியிடுவதற்கு தடை ஏதுமில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரான இலங்கையர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இலங்கையரை சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

மேலும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் அவர் ஏற்கனவே கண்காணிக்கப்பட்ட நபர் தான் என்று தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இலங்கையர் குறித்த பெயர் விபரங்கள் பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அப்பாவி பொது மக்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையரின் பெயர் விவரங்களை வெளியிடுவதற்கு தடை ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |