மர்மமான முறையில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்பழகன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அன்பழகன் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தபோது அன்பழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அன்பழகனின் மகன் கார்த்திக் வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பழகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அன்பழகனின் மர்மமான இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.