ஏரியில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஏரியில் மிதந்து கொண்டிருந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தலைகுந்தா பகுதியில் வசித்த விவசாயியான ராஜன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குத்தகைக்கு வாங்கிய விவசாய நிலத்தில் போதிய அளவு விளைச்சல் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த ராஜன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.