Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை…. பதைபதைக்கும் வீடியோ காட்சி….!!!

உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்கள் மீது காரை ஏற்றிச் செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள பன்வீர்பூரில் அரசியல் ரீதியான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முதல் மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்புக் கொடிகளுடன் சாலையின் இருபுறமும் திரண்டு போராட்டம் நடத்தி வந்துள்ளனர். அப்போது வந்த பாஜக தொண்டரின் கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பாஜக தொண்டர்கள் வந்த கார்களை அவர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து துணை முதல்-மந்திரி கேசவ பிரசாத் மவுரியா தனது பயணத்தை ரத்து செய்தார். விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை மோதியது, மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா என விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவையின் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் மீது காரை ஏற்றியதை வீடியோவாக பதிவு செய்து காங்கிரஸ் கட்சியினர் அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சி டுவிட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |