உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்னர். இந்நிலையில் நேற்று நடந்த வன்முறையை பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் டுவிட்டரில் பேசி இருப்பதாவது, இந்தியாவில் தொடர்ந்து விவசாயிகள் உயிர் இழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதனை தொடர்ந்து நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது விவசாய மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை அரசிடம் சொல்வதற்கே அவர்கள் உயிரிழக்க வேண்டிய நிலைமையில் உள்ளார்கள். இது ஒரு மிகப் பெரிய கொடுமையாகும். இவை வெளி உலகத்திற்கு தெரியக்கூடாது என்று எண்ணுவது உத்தரப் பிரதேச அரசின் மூர்க்கம் என்று அவர் கூறியுள்ளார்.