Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டம் – பிரதமர் தொடங்கி வைக்கிறார்…!!

விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் சொத்து  அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசின் சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமல்படுத்த படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமை பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக அதை  வழங்கப்படுகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக ஆகிய ஆறு மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டையினை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் அட்டையின் குறிப்பிடப்படும் சொத்துகளை பயன்படுத்தி கடன் பெறுவதற்கு இந்த அட்டை உதவும். அதே போல இந்த அட்டையை வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என பிரதமர் திரு மோடி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |