Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சம்பள பாக்கியை கேக்குறான்” விவசாயியின் கொடூர செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…….!!

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை விவசாயி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் சித்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்தாளபுரத்தில் விவசாயி முருகேசனிடம் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சித்தப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவர் நெய்தாளபுரம் வனப்பகுதி சாலையோரத்தில் கடந்த 28-ம் தேதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்தப்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்படி முருகேசனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முருகேசன் கொடுத்த வாக்குமூலத்தில் “சித்தப்பா என்னிடம் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மதுபோதையில் அவர் என்னிடம் வந்து சம்பள பாக்கியை கேட்டதனால் ஆத்திரமடைந்த நான் அவரை பிடித்து கீழே தள்ளி விட்டேன். இதனால் நிலைதடுமாறி சித்தப்பா கீழே இருந்த கல் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். எனவே கொலையை மறைப்பதற்காக திட்டமிட்டு சித்தப்பாவின் சடலத்தை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றேன். அதன்பின் அங்கு சாலையோரத்தில் சித்தப்பாவின் சடலத்தை வீசி கீழே விழுந்து இறந்தது போல் மாற்றிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக முருகேசன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்”. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் முருகேசனை கைது செய்தனர்.

Categories

Tech |