Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்கச் சென்ற மான்…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. வனத்துறையினரின் செயல்….!!

விவசாய கிணற்றில் மான் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்பநாயக்கனூரில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் தேடி காற்றிலிருந்து மான் ஒன்று வந்துள்ளது. அப்போது தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானிற்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றில் விழுந்த மானை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வனத்துறை சட்டப்படி மான் புதைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |