விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் பஞ்சாயத்து சந்து தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பாபு மற்றும் செல்லத்துரை என இரு மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த முருகனை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக அவரை கொலை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.