மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த விவசாயி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையனப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சரிதா என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இதில் தென்னரசு மற்றும் பூவரசம் ஆகிய 2 மகனும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சரிதாவுக்கும் அன்பழகனுக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
அதன்பின் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் அன்பழகன் தனியாக பிரிந்து தனது நிலத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதனையடுத்து அன்பழகன் நிலத்தில் இருக்கும் வீட்டில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.