விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியில் பச்சைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பச்சைவேல் குளத்தூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இதனால் பச்சைவேல் தினமும் காலையில் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் அடித்து வந்துள்ளார். வழக்கம்போல் காலையில் பச்சைவேல் கட்டிடத்திற்கு தண்ணீர் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தரையில் கிடந்த மோட்டார் மின்சார வயர்களை பச்சைவேல் மிதித்துவிட்டார்.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பச்சைவேலை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பச்சைவேலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பச்சைவேலின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.