வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரபாடி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் உரம் வாங்குவதற்காக பெரணமல்லூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து தங்கம் மகன் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை பூட்டி கொண்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து சுதாகர் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுதாகர் பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.