Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழதாழனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான ஏழுமலை தனது வீட்டில் நெற்பயிருக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார்.

இதனை அறிந்த ஏழுமலையின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலையின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |