மது அருந்தியதை கர்ப்பிணி மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முன்னுகொட்டாய் பகுதியில் ரேணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரேணுக்கும் முதலைமடு பகுதியில் வசிக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ரேணு மது அருந்தியுள்ளார்.
இதனை மனைவி பிரியா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ரேணு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த பிரியா ரேணுவை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரேணு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கண்ணமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.