விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்திராம்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் சொர்ணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவரது கணவர் மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சொர்ணம் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அதன்பின் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த இரண்டு வெள்ளி கொலுசுகள் மற்றும் 15 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது பற்றி சொர்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.