Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமா சத்தம் கேட்டுச்சு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 6 பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பூரை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் அங்கு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் குமாரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கதவு மூடப்பட்டு இருந்ததினால் குண்டுகள் வெளியே பயங்கரமான சத்ததுடன் வெடித்துள்ளது. இதனைக் கேட்டு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குண்டு வெடித்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் குமாருக்கும் அவரின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவம் நடந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |