இந்தியாவின் வேளாண் சட்டங்கள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து 90 நிமிடங்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் இப்போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.
இந்த போராட்டம் குறித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியியினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து வாங்கிய மனுவை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென சமர்ப்பித்தனர்.
இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற நிலையில் , இது குறித்து தகுந்த ஆதாரம் மற்றும் உண்மை ஏதும் இல்லாததால் இவ்விவாதம் வருத்தம் அளிக்கிறது என இந்திய வெளியுரவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது . மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இவ்விவாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.