Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாக்கியை தள்ளுபடி செய்யணும்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

விவசாயிகள் குழிக்குள் இறங்கி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரத்தில் விவசாயிகள் குழிக்குள் இறங்கி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், நகர செயலாளர்கள் பத்தமடை சுப்பிரமணியன், கோபாலசமுத்திரம் மாரியப்பன், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜவேலு, ஒன்றிய விவசாய அணி தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அவர்கள் கூறும்போது, சுப்பிரமணியபுரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை முறையில் விவசாயம் செய்து வருகின்றோம்.

அந்த நிலத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கொரோனா காலத்தில் சில விவசாயிகள் குத்தகை பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கோவில் நிர்வாக அதிகாரிகள் குத்தகை பாக்கியை முழுமையாக தருமாறு வலியுறுத்துகின்றனர். எனவே பழைய குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மேலச்செவல் வருவாய் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |