Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்குவாரிகளை தடை செய்ய கோரி…. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கல்குவாரிகளை தடை செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இருக்கன்துறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் ராதாபுரம் தாலுகா உறுப்பினர் முகமது பயாஸ் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் கூறுவதாவது, இருக்கன்துறையில் 10 – க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் அருகில் உள்ள கிராம வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.

இதனையடுத்து லாரிகள் அதிக பாரங்களை கொண்ட கற்களை ஏற்றிச் செல்வதால் சாலைகள் பழுதடைந்து வருகிறது. மேலும் கல்குவாரியில் அதிக ஆழமாக தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் எனவும், புதிய கல்குவாரிகள் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தாலுகா உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |