Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை இப்படித்தான் பயன்படுத்தனும்… இணைய வழி பயிற்சி… விவசாயிகளின் கருத்து…!!

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு இணையவழியில் பயிற்சி அளித்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மூலம் இணைந்து நடத்தப்பட்ட விவசாயிகளுக்கான இணையவழி பயிற்சியில் பயிர் கழிவு மேலாண்மை மற்றும் ரசாயன மருந்துகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் கண்ணன் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |