Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தர வலியுறுத்தி…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்…. கலந்து கொண்ட பலர்….!!

விவசாயிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பகுதி விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு தண்ணீர் தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தாலுகா செயலாளர் சுப்புத்துரை தலைமையில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ராமையா, திருச்செந்தூர் தாலுகா தலைவர் நடேசன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் தாலுகா குழு விஜயபாண்டி, சண்முகசுந்தரம், பேச்சிமுத்து, அருள்சாமி, மாரிசெல்வம், ஜெயக்குமார், திருச்செந்தூர் விவசாய சங்கம் சேகர், தாலுகா குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |