Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. குறைந்த வட்டியில் அதிக கடன்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் கிடைக்கும் என்றும் அவர்களது வருமான அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் அவசர தேவைக்காக கடன் பெறவும், விவசாயம் செய்ய உதவியாகவும் கிசான் கிரெடிட் கார்டு என்ற அட்டெள அட்டையில வங்கிகள் தரப்பில் வழங்கப்படுகிறது. கிசான் கிரெட்கார்டுகளுக்கான செயல்முறை கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு இதன் மூலம் 4% வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2% வட்டிக்கு கூட கடன் வாங்கலாம். எனவே நீங்களும் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க நினைத்தால் வங்கியில் சுலபமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கிசான் கார்டுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்த பிறகு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான வங்கியை தேர்ந்தெடுத்து அந்த வங்கியில் விண்ணப்பிக்கலாம். மேலும் கிசான் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தவிர நில ஆவணத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |