Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் என்ன பண்ண போறேன்… விவசாயி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வயலில் விளைச்சல் இல்லாததால் பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புலியூர் பகுதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் நடராஜன் தனக்கு சொந்தமான வயலில் பல வகை பயிர்களை பயிரிட்டு வந்துள்ளார். ஆனால் சரியான விளைச்சல் கிடைக்காமல் நடராஜன் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த நடராஜன் வயலுக்கு சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விவசாயியான நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |