விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாப்புதுகுடி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்ம்மாள் அதே ஊரில் வசிக்கும் வேணி என்பவரிடம் குடும்பச் செலவுக்காக அடகு வைக்க ஒரு பவுன் தங்க சங்கிலியை வாங்கியுள்ளார். இதனை வேணி ராஜம்மாளிடம் திருப்பி கேட்டதற்கு அவர் தர மறுத்துள்ளார்.
இதுகுறித்து வேணி கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை உடனடியாக வாபஸ் வாங்க கோரி வேணியின் கணவரான விவசாயி மணிகண்டனுக்கு ராஜம்மாளின் மகன் உதயபிரகாஷ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உதயபிரகாஷை கைது செய்துள்ளனர்.