விவேக்கின் உடலை நேரில் வந்து சந்திக்க முடியாததால் விஜய் வருத்தத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் விவேக்கின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போயுள்ளது.
ஏனென்றால், ‘தளபதி 65’ படத்திற்காக விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இதனால் அவர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் வருத்தப்பட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்டாயம் விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிப்பார் என்று தெரியவந்துள்ளது.