விவோ நிறுவனம் தனது தரப்பிலிருந்து மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக, ஆன்லைன் வகுப்பிற்காக என பிரத்தியேகமாக தனிப்பட்ட மொபைல் வைத்திருப்பதை அனைவரும் விரும்ப தொடங்கினர். இதற்கு பயனளிக்கும் வகையில், ரியல்மீ நிறுவனம் மிக குறைந்த விலையில், அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய தனது ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து,
ரெட்மி நிறுவனமும் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த இரண்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்த மலிவான போன்கள் மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற, இதனை தொடர்ந்து vivo நிறுவனமும் விலை குறைவான ஸ்மார்ட் போனை மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த போன் 2 ஜிபி RAM 32 ஜிபி ROM மெமரி கொண்ட வேரியண்ட்டில் மட்டும் வெளியாகும். மேலும் இந்த போனில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4030 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட இந்த போனின் விலை ரூபாய் 8,100 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. விவோ தரப்பிலிருந்து, மிக மலிவான ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது vivo ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.