அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளுவர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள் உரிய அனுமதியின்றியும் கொரோனா இடைவெளியை பின்பற்றாமலும் கலந்துகொண்டனர். இதனால் காவல்துறையினர் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் செய்த 33 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.