Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து வந்த பிளஸ்-2 மாணவி…. வியாபாரி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள விளாப்பாக்கம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரியாக உள்ளார். இந்நிலையில் பாண்டுரங்கன் அந்த வழியாக வந்த பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி ராணிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாண்டுரங்கனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |