வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் சுரேஷ்லிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுரேஷ் லிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் லிங்கத்தின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு லெவிஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் லிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.