வியாபாரிகள் நலசங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைமை வகித்தார். இதனையடுத்து துணைத் தலைவர் பெத்துக்கனி, துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் பேசினார்.
அதில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை வேகமாக செயல்படுத்த வேண்டும் எனவும், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனே சரி செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் சரக்கு சேவை வரி எடுக்காத வணிகர்களும் வணிக வாரியத்தில் உறுப்பினராக சேரலாம் எனவும், 3 மாதங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.