Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி…. வியாபாரிகள் திடீர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வியாபாரிகள் திடீரென கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் நீண்ட நாட்களாக கடை வியாபாரிகளுக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பிரச்சனை குறித்து நடைபாதை வியாபாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இந்த வழக்கை ரத்து செய்யாததால் நெல்லை டவுன் வடக்கு ரத வீதி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் சுமார் ஒரு மணிநேரம் திடீரென கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காலை 9 மணிக்கு ஜவுளி, நகை மற்றும் இதர கடைகள் வழக்கம்போல் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கடைகளின் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது கடைகளின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் காலை 10.30 மணி அளவில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. இதனால் நெல்லை டவுன் வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Categories

Tech |