பாங்கி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டு காரணமாக பாங்கி மார்க்கெட் அடைக்கப்பட்டு இருக்கின்றது.
இதனால் வியாபாரிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் மார்கெட்டை திறக்கக்கோரி காய்கறி, மளிகை மற்றும் இதர வியாபாரிகள் பாங்கி மார்க்கெட் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.