வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள நயினாகரம் பகுதியில் வியாபாரியான ஜோதிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ராஜ் தொழில் தொடர்பாக திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இதனையடுத்து ஜோதி ராஜ் பணிகளை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஜோதி ராஜ் வேய்ந்தான் குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் ஜோதிராஜை மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஜோதிராஜ் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தருவாய் பகுதியில் வசிக்கும் சுடலைமணி, சுடலைக்கண் மற்றும் இசக்கிமுத்து ஆகியோர் என்பதும் அவர்கள் ஜோதிராஜை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.