உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றான கனடாவிற்கு மக்கள் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் அழகை வியந்து பார்க்கும் ரசிகர்களுக்கு கனடா ஒரு சொர்க்கமாகும். இங்கு தமிழர்கள் சென்று ரசிக்க வேண்டிய பல இடங்களில் இருக்கின்றது. அதாவது அழகிய சாலைகள் மற்றும் பனி மூடிய மலைகளின் அழகு உங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இங்கு வருகை புரிகின்றனர். கொரோனா காலம் முடிந்தபின் சுற்றுலாவை விரும்பும் தமிழர்கள் கனடாவிற்கு சென்று கட்டாயம் ரசித்து விட்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்: இது வட அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வரலாற்று பாரம்பரியங்களை பார்வையிடலாம்.
ஆபிரகாம் ஏரி: குளிர்காலத்தில் இந்த ஏரியின் வெப்பநிலை மைனஸ் 30 பார்ன்ஹிட் ஆகும். இந்த ஏரியில் தண்ணீர் குமிழ்கள் எழுந்து உடனடியாக உரைக்கின்றது. இவ்வாறு உறைந்த குமிழ்கள் இந்த ஏரியை இன்னும் அழகாக வைக்கிறது.
நயாகரா நீர்வீழ்ச்சி: கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையினில் 3 தனித்தனி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் குதிரைவாலி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். அதன்பின் டொராண்டோவிலிருந்து 1 மணி நேரம் கனேடியப் பக்கத்தில் இருந்து 3 நீர்வீழ்ச்சிகளையும் ஒருவர் எளிதாக காண முடியும்.
பிரின்ஸ் எட்வர்ட் தீவு: மணல் கடற்கரைகள் மற்றும் சிவப்பு பாறைகளை பார்க்க மக்கள் தொலை தூரத்திலிருந்து வருகின்றனர்.
கனடாவின் தேசிய பூங்கா: இது வட அமெரிக்காவில் கனேடிய கடற்கரையில் உள்ளது. இங்கு உள்ள மலைகளின் அழகை கண்டு யுனெஸ்கோ இந்த படத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.