தக்காளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிவட்டம் பகுதியில் தக்காளி வியாபாரியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும் மற்றும் துர்கா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சேகர் சில மாதங்களுக்கு முன்பாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சேகர் தனது சொந்த ஊரில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென சேகர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.